88929 25504
 
  • Total Visitors: 3750524
  • Unique Visitors: 309604
  • Registered Users: 35961

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

தேவாங்க புராணம்
 

நன்றி :  http://www.nakkheeran.in/Users/frmArticles.aspx?A=15497

 

நம் இந்துமத இலக்கியங்களுள் புராணங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. பழைய வரலாறுகளே புராணங்கள் எனப்படுகின்றன. "எது தொன்று தொட்டு இன்று வரை பரவியிருக்கிறதோ அதுவே புராணம்' என வாயு புராணம் கூறுகிறது.

ஆதியில் சிவபெருமானால் அருளப் பட்டவை புராணங்கள். சிவபெருமான் கூறியதை நந்தி கேட்டு, அதை சனத்குமாரருக்குக் கூற, அவர் வியாசருக்குக் கூறினார். வியாசரால் தொகுக்கப்பட்ட புராணங்கள் சூத முனிவரால் உலகினருக்கு  எடுத்துக் கூறப்பட்டன.

சிவபுராணங்கள் 10, விஷ்ணு புராணங்கள் 4, பிரம்ம புராணங்கள் 2, அக்னி புராணம், சூரிய புராணம் என புராணங்கள் 18.

"எப்பொழுதும் உண்மையைப் பேசு; தர்மத்தைச் செய்' என்பதை, "ஸத்யம் வத தர்மம் சர' என வேதம் கூறுகிறது. இத்தகைய வேதக் கட்டளைகளை- வேதம் கற்றோரும் மற்றோரும் நன்கு அறிந்து, அவற்றை வாழ்க்கையில் கடைப்பிடித்து உய்வதற்கு ஏற்றவகையில் புராணங்கள் சுவையான நீதிக்கதைகளால் விளக்குகின்றன.

"இறைவன் ஒருவனே, அவனே முதல்வன்' என்பது சைவ சித்தாந்தக் கொள்கைகளுள் தலையாயது. சைவர்கள் முதல்வனை சிவனாகவும், அவன் ஆற்றலை அம்மையாகவும் வழிபடுகின்றனர்.

சைவ நெறியைப் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டு படைக்கப்பட்டது தேவாங்க புராணம். தேவர்களின் துயர் துடைக்க அவதரித்த தேவலரின் புகழ்பாடும் தேவாங்க புராணம், சிவ புராணங்களுள் ஒன்றான பிரம்மாண்ட புராணத்தில் இடம் பெற்றுள்ளது. தேவாங்க குல மக்களின் குலதெய்வமான சௌடேஸ்வரி அம்மனின் புகழையும் பாடுகின்றது. சிவனிலிருந்து சக்தி வடிவெடுக்கும் அம்பிகையின்  அவதாரங்களில் ஒன்று சௌடேஸ்வரி அம்மன் அவதாரம். சக்தி வழிபாட்டின் சிறப்பும் சைவ நெறிகளுமே இப்புராணத்தில் உணர்த்தப்படுகின்றன.
 

மற்ற குலத்தாரின் மான சம்ரட்சணம், ஆன்மிக உயர்வு ஆகியவற்றுக்காக தெய்வீக சேவை புரிந்த குலம் தேவாங்க குலம். இக்குலத்தின் மூலகர்த்தர் தேவாங்கர் என்றழைக்கப்படும் தேவல முனிவர். துஷ்ட நிக்ரகம், சிஷ்ட பரிபாலனம் புரிவதற்காக பரம்பொருள் எடுத்த அவதாரமே தேவலர் அவதாரம்.

கோடி சூரியப் பிரகாசத்துடன் விளங்கும் திருக்கயிலையில், நவமணிகளால் இழைக்கப்பட்ட அரியாசனத்தில் சிவபெருமானும் பார்வதிதேவியும் வீற்றிருந்தனர். தேவர், அசுரர், கந்தர்வர், வித்யாதரர், கின்னரர், முனிவர், நாகர், இயக்ககர், சித்தர் ஆகியோர் சூழ்ந்திருந்து அம்மையையும், அப்பனையும் போற்றிப் பாடும் மங்கல இசை எங்கும் பரவி ஒலித்துக்கொண்டிருந்தது. முற்றுந்துறந்த முனிவர்கள் ஆங்காங்கே அமர்ந்து தவம்செய்து கொண்டிருந்தனர். புண்ணிய தீர்த்தங்களும் மலர் வாவிகளும் புனித மலைக்கு அழகு சேர்ப்பதுபோல் அமைந்திருந்தன.

நைமிசாரண்ய முனிவர்கள், தீர்த்தங்களுள் பெருமை மிக்கதான புஷ்கர தீர்த்தத்தில் நீராடி தங்கள் நித்திய கருமங்களை முடித்துவிட்டு தீர்த்தக்கரையில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்குவந்த சூத முனிவரை வணங்கி வரவேற்று தங்கள் வேண்டுகோள் ஒன்றை அவர்முன் வைத்தனர்.

நைமிசாரண்ய முனிவர்கள் பதினெண் புராணங்களையும் சூத முனிவர் சொல்லக்கேட்டு மகிழ்ந்திருக்கின்றனர். பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ள தேவாங்க முனிவரது சரிதத்தை முன்பொரு சமயம் சுருக்கமாகக் கேட்டறிந்திருந்த முனிவர்கள் அதனை விளக்கமாகக் கேட்க விருப்பம் கொண்டு, தங்கள் விருப்பத்தை சூத முனிவரிடம் பயபக்தியுடன் தெரிவித்தனர்.

அவர்கள் வேண்டுகோளை மகிழ்வுடன் ஏற்ற சூத முனிவர், ""கேட்பவர்கள் பாவத்தைப் போக்கி வீடுபேறளிக்கும் புண்ணிய சரிதத்தைக் கூறுகிறேன்; கேளுங்கள்'' என்று கூறி, தேவலர் வரலாற்றை பக்தி நிறைந்த வார்த்தைகளால் சொல்லத் தொடங்கினார்.

எல்லாவற்றிற்கும் தலைவனான ஆதியும் அந்தமும் இல்லாத சிவபெருமான் திருக்கயிலையில் ஒளி வீசும் அரியாசனத்தில் அமர்ந்திருந்தார். உலகைப் படைக்கத் திருவுளம் கொண்டு, மூன்றுவித நற்குணங்களுடன் தன் அருகில் அமர்ந்திருந்த அம்மையை ஈசன் அருள் பார்வை கொண்டு நோக்கினார். அம்மையின் ரஜோ குணத்தில் பிரம்மதேவனும், சத்துவ குணத்தில் திருமாலும், தமோ குணத்தில் உருத்திரனும் தோன்றினர்.

பிரம்மனைப் படைத்தல் தொழிலையும், திருமாலைக் காத்தல் தொழிலையும், உருத்திரனை அழித்தல் தொழிலையும் செய்யும்படி சிவபெருமான் பணித்தார். மும்மூர்த்திகளும் ஈசனின் ஆணையை ஏற்று, தங்கள் பணிகளை சிறப்புற நிறைவேற்றுவதாக உறுதி கூறி ஈசனிடம் விடைபெற்றுச் சென்றனர்.

சிவபெருமான் அருளியபடிபிரம்மன் படைத்தல் தொழிலைத் தொடங்கினார்.

திருவருளின் துணைகொண்டு பல உலகங்களையும், பூமியையும்; தாவரங்கள், விலங்குகள், பறவைகள், மலைகள், கடல் ஆகியவற்றையும் படைத்தார்.

பின்னர் மனுவைப் படைத்து தேவர், மானிடர், நாகர் ஆகியோர்க்கு மானத்தைக் காக்கும் ஆடைகளை நெய்து கொடுக்கும் தொழிலைச் செய்யும்படி அவருக்குக் கட்டளையிட்டார். பிரம்மன் தனக்கிட்ட பணியை மகிழ்வுடன் ஏற்ற மனு, காம்பிலி நகர் சென்று தன் கற்பனையில் தோன்றிய வண்ணம் அழகிய ஆடைகளை அவரவர் விருப்பத்திற்கேற்றபடி நெய்து கொடுத்தார்.

தன்னைப் படைத்த பிரம்மாவைப் பலவாறு போற்றி வணங்கிய மனு, பிரம்மாவைப் படைத்த சிவபெருமானிடம் மிகுந்த பக்திகொண்டு அவர் திருவடிகளுக்குத் தொண்டு செய்து வந்தார். நற்பண்புகளுடன் திகழ்ந்து தவ வாழ்க்கை வாழ்ந்த மனுவுக்கு சிவபெருமான் வீடுபேறு அருளினார்.

மனு வீடுபேறு எய்தியபின், மானங்காக்க ஆடைகளின்றி மூவுலகத்தாரும் கவலையுற்றனர். இலை, தழைகள், மரவுரி போன்றவற்றை அணிந்து ஆடைத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர்.

அதற்கான மாற்றுவழிதேடி தேவர்கள் பிரம்மனை நாடிச் சென்றனர். சிவபெருமானே இதற்குத் தீர்வு காணக்கூடியவர் என்று கூறி, தேவர்கள் பின் தொடர திருக்கயிலை சென்றார் பிரம்மா.

தேவர்கள் சிவபெருமானைப் பணிந்து நின்றனர். ""எம் பெருமானே, மானங்காக்க ஆடைகளின்றித் துன்புறுகிறோம். வைதீக காரியங்களுக்கு உரிமை அளிக்கும் பூணூல் இல்லாமல் தெய்வீகம் இழந்து நிற்கிறோம். ஆடையும், பிரம்ம சூத்திரமும் வழங்க ஒரு மகாபுருஷனைத் தந்தருள வேண்டுகிறோம்'' எனத் தங்கள் குறையை இறைவன்முன் வைத்தனர்.

தேவர்களின் குறைகளைக் கேட்ட சிவபெருமான் ஒரு கணம் மௌனமாக இருந்து தியானித்தார். சிவபெருமானின் இதயக் கமலத்திலிருந்து பேரொளிப் பிழம்பொன்று வெளிப்பட்டு நின்றது. அந்தப் பேரொளி மான்தோல், தண்டு, கமண்டலம், ஜடாமுடி, பவித்ரம், திருநீறு, உருத்திராக்கம், கங்கணம், முப்புரிநூல் ஆகியவற்றைத் தரித்த ஆணழகனாய் நின்றது. தேவர்கள் துயர்துடைக்க நற்பண்புகளின் தோற்றமாய் நின்ற அம் மகாபுருஷனை, ஈசன் தேவலர் என்ற பெயரிட்டு அழைத்தார்.

பணிவுடன் வணங்கி நின்ற தேவலரை நோக்கி, ""தேவலனே, இவ்வுலகுக்கு நீ ஆற்றவேண்டிய பணி ஒன்றுள்ளது. அதற்காகவே உன்னை அழைத்தோம். நீ திருமாலிடம் சென்று, அவர் உந்திக் கமல நூலைப் பெற்று ஆடைகள் நெய்து அனைவருக்கும் கொடுப்பாயாக. நீ அளிக்கும் ஆடைகள் தேவர்களின் அங்கங்களை அலங்கரிப்பதால் தேவாங்கன் என்ற பெயரையும் நீ பெறுவாய்'' என்றருளி, மேருமலைக்குத் தென் பாகத்திலுள்ள ஆமோத நகர் சென்று நல்லாட்சி செய்து வரும்படி வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

(சிருஷ்டி தொடங்குவதற்குமுன் அண்ட சராசரங்கள் எல்லாம் தேவல சொரூபமாய் இருந்தது. சிவ சகஸ்ராரத்தில் வியாபித்திருக்கும் ஜோதி தேவலப் பிரம்மமே. உலகத்தின் தோற்றம், காப்பு, ஒடுக்கம் ஆகியவற்றுக்கெல்லாம் தேவலரே காரணகர்த்தா. தேவலப் பரம்பொருள் அவ்வப்போது, சிவபெருமானின் சகஸ்ராரத்திலிருந்து வெளிப்பட்டு தேவர்களுக்கும், முனிவர்களுக்கும் ஆடைகள் தந்து உடனே மறைந்து விடும். இது கல்பங்கள்தோறும் நடந்துவரும் சம்பவம். இதுபோன்றே ஒரு கல்பத்தில் நிகழ்ந்ததாக தேவாங்க புராணம் தொடங்கு கிறது.)ஒரு கல்ப காலத்தின் துவக்கத்தில் தேவர்களும் முனிவர்களும் ஆடை, பூணூல் ஆகியவற்றுக்காக சிவபெருமானைப் பிரார்த்தித்தனர். சிவபெருமான் தேவலப் பரம்பொருளை தியானித்தார். பரம்பொருள் தேவல முனிவர் வடிவம் தாங்கி சிவ சகஸ்ரார கமலத்திலிருந்து வெளிப்பட்டு அங்கிருந்தோர் அனைவருக்கும் ஆடையும் பூணூலும் வழங்கியது.

தேவர்களுக்கு உபகாரமாய் இருந்த தேவல முனிவர், மானிடராகப் பிறந்து மானிடர்கள் அனைவருக்கும் நிரந்தரமாக உபகாரம் செய்ய விரும்பினார். அதனைச் செயல்படுத்த காண்ட ரிஷி மூலமாக ஒரு லீலையை நிகழ்த்தினார்.

அனைவருக்கும் ஆடையும், பூணூலும் வழங்கிய தேவலர் காண்ட ரிஷிக்கு மட்டும் எதையும் கொடுக்கவில்லை. காண்ட ரிஷி கேட்டதற்கு, ""உமக்கு இன்று இல்லை; நாளை தருகிறேன்'' என்று தேவலர் கூறினார். அதனால் கோபம் கொண்ட ரிஷி, ""எல்லாருக்கும் ஆடையும் பூணூலும் வழங்கிய நீ எனக்கு மட்டும் இல்லையென்று கூறியதால் பூலோகத்தில் மானிடனாகப் பிறப்பாய்'' எனச் சாபமிட்டார்.

தேவல முனிவர், ""எல்லா உயிர்களும் என் சொரூபமே. எனக்கும் மானிடர்க்கும் எந்த பேதமும் இல்லை. ஆகவே மானிடராகப் பிறப்பது மானிடர்க்கு உபகாரமாக அமையும் என்பதால், நீர் இட்ட சாபத்தை மகிழ்வுடன் ஏற்றுக்கொள்கிறேன்'' என்று கூறி, காண்ட ரிஷியின் கோபத்தை மேன்மேலும் தூண்டி, ஏழு அவதாரங்கள் எடுக்க சாபம் பெற்றார். அதில் முதல் அவதாரமே தேவல முனிவர் அவதாரம். (ஏற்கெனவே, திருமாலின் உந்திக் கமல நூலில் ஆடைகள் நெய்து அனைவர்க்கும் வழங்க சிவபெருமான் பணித்தபோது, தேவலர் ஆறு பிறவிகள் எடுத்து ஏழாவது பிறவியில் சொர்க்கம் செல்வார் என ஆசி வழங்கியிருந்தார்.)

சிவபெருமான் ஆணையை ஏற்று அவரது ஆசிகளுடன் புறப்பட்ட தேவலர், சௌடேஸ்வரி அம்மையை வணங்கி அவளருள் வேண்டி நின்றார். ""நீ மேற்கொண்டுள்ள நற்பணிக்கு எனது ஆசிகள். உனக்கு இடர் வரும்போது என்னை தியானம் செய். நான் தோன்றி உன் இடர்களைக் களைந்து உன்னைக் காப்பாற்றுவேன்'' என்று கூறி ஆசீர்வதித்தாள்.

தேவலர் திருப்பாற்கடல் நோக்கிப் புறப்பட்டார். திருப்பாற்கடலுக்குச் சற்று முன்னதாக பழ மரங்களும், நறுமணங் கமழும் பூஞ்செடிகளும் சூழ்ந்த ஒரு அழகிய ஆசிரமத்தைக் கண்டார். அதன் இயற்கைச் சூழல் தேவலரின் மனதை ஈர்த்தது. தனது குறிக்கோள் நிறைவேறத் திருமாலை நோக்கித் தவமியற்ற அதுவே தகுந்த இடம் எனத் தேர்ந்து, அங்கமர்ந்து பல நாட்கள் கடுந்தவம் செய்தார்.

தேவலரின் தவத்தில் திருப்தி கொண்ட திருமால் தேவலர்முன் காட்சி அளித்தார். ""தேவலனே, உன் பக்திக்கு மெச்சினோம். வேண்டும் வரம் கேள்'' என்று திருவாய் மலர்ந்தருளினார்.

""ஜகத்ரட்சகனே, சிவபெருமானின் ஆணைப்படி தங்கள் நாபிக்கமல நூலைப் பெற்றுச் செல்ல வந்துள்ளேன். அந்த நூலைக் கொண்டு திரிலோகவாசிகளின் மானங்காக்க ஆடைகள் நெய்து தரப் பணிக்கப்பட்டுள்ளேன். தாங்கள் அருள்கூர்ந்து நாபிக்கமல நூலைத் தந்தருள வேண்டும்'' என தேவலர் திருமாலைப் பணிந்து வணங்கி தன் வேண்டுதலை முன்வைத்தார்.

""தேவாங்கனே, பூவுலகம் தோன்றுவதற்கு முன்பிருந்தே பயன்பாடின்றி இருந்துவரும் இந்த நூலை இதுவரை காப்பாற்றி வந்துள்ளேன். இனிமேலாவது இந்த நூல் நல்ல காரியங்களுக்குப் பயன்படட்டும். நூலைப் பெற்றுச் சென்று உன் பணியைத் தொடர்வாயாக'' என ஆசி கூறி நாபிக் கமல நூலைத் தேவலரிடம் அளித்தார்.

தேவலர் திருமாலிடம் விடை பெற்றுப் புறப்பட்டபோது, ""தேவலனே, நீ பெற்றுச் செல்லும் இந்நூலைக் கவர முனிவர் வேடம் பூண்ட அரக்கர்கள் முயற்சிப்பர். அவர்களை வெற்றிகொள்ள உதவியாக சக்கரப் படை ஒன்றினையும் உனக்கு அளிக்கிறேன். இதனையும் பெற்றுச் செல்'' என்று கூறி, தன் சக்கரப்படை ஒன்றினை தேவலரிடம் வழங்கினார்.

திருமாலிடமிருந்து விடைபெற்று தன் பயணத்தைத் துவங்கிய தேவலர் சமுத்திரக் கரையோரமிருந்த நாவலந்தீவை வந்தடைந்தார். கனி மரங்களும் மலர்ச் செடிகளும் சூழ்ந்த ஒரு பர்ணசாலையைக்கண்டு, அங்குள்ள முனிவர்களின் ஆசியைப் பெற விரும்பி அங்கு சென்றார்.

குடிலருகில் கையில் ஜெப மாலையுடன் முனிவர் ஒருவர் சீடர்கள் புடை சூழ அமர்ந்திருந்தார். முனிவரின் பாதங்களில் விழுந்து வணங்கிய தேவலர், தான் மேற்கொண்டுள்ள பணி செவ்வனே நடைபெற ஆசிகள் பெற வந்துள்ளதாகக் கூறினார்.

திருமாலிடமிருந்து நாபிக்கமல நூலைப் பெற்று வந்திருப்பதாகவும், அதனைக் கொண்டு ஆடைகள் நெய்யும் பணியை மேற்கொள்ளப் போவதாகவும் தேவலர் கூறியதைக் கேட்ட தவமுனிவர், ""உன்னிடமுள்ள நூல் மிகவும் புனிதமானது. கிடைத்தற்கரிய இந்த நூலை யாரேனும் அபகரித்துச் செல்ல முயற்சிக்கலாம். இன்றிரவு நீ இங்கு தங்கிச் செல். அதுவே உனக்குப் பாதுகாப்பானது'' என்று கூறினார்.

திருமால் கூறியபடியே முனிவரும் நூலை பத்திரமாகக் கொண்டு செல்லவேண்டும் என்று கூறியதால், நூலின் பாதுகாப்பு கருதி அன்றிரவு ஆசிரமத்திலேயே தங்கினார். சீடர்கள் மத்தியில் உறங்கிக் கொண்டிருந்த தேவலர் திடீரெனக் கண்விழித்தார். ஆசிரமத்திற்குள் கூச்சலும், குழப்பமுமாக இருந்தது. தேவலரைச் சுற்றிலும் ஆயுதங்களோடு அரக்கர்கள் நின்றிருந்தனர்.

முனிவர்கள் ஒருவர்கூட கண்ணில் தென்படவில்லை. அரக்கர்கள் என்ன மாயம் செய்தனரோ என தேவலர் கவலையுற்றார்.

Image: 
Categories: 
Share Share
Scroll to Top