88929 25504
 
  • Total Visitors: 3750269
  • Unique Visitors: 309507
  • Registered Users: 35959

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

ஜனிவார ஹப்பா /  பூணூல் பண்டிகை மந்திரம்

தேவாங்க மக்களின் முக்கிய பண்டிகை:

ரிக் உபகர்மா / யக்ஞோபவீதம் / ஜனிவார ஹப்பா /  பூணூல் பண்டிகை 

ரிக் வேத ஸம்ஹிதைகளில் யக்ஞோபவீதம் : 

கிருஹ்ய சூத்திரங்களில் குறிக்கப்படும் யக்ஞோபவீதம் அம்சங்களை ரிக் வேத ஸம்ஹிதையிலேயே நம்மால் காண முடிகிறது. 

 பூணூல் ஏன் தேவாங்க மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்ற கேள்விக்கு மிகவும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் சொல்லவேண்டும் என்றல் பூணூல் இந்த உலக மக்களுக்கு மட்டும் அல்லாது தேவர்களுக்கும் தேவாங்கரான நம்மால் வழங்க பட்ட ஒன்று. மிகவும் அர்த்தமுள்ள, மிகவும் பவித்திரமான இந்த பூணூலை நாம் அணிவதும் கொண்டாடுவதும் நம் தேவாங்க மக்களின் முழு முதல் கடமை.

தேவாங்க ரிஷியானா ஸ்ரீ தேவல மகரிஷியானவர் காயத்ரி, சரஸ்வதி மற்றும் சாவித்ரி என்ற மூன்று பெரும் தெய்வ சக்திகளை மூன்று இழைகளாகவும். சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்ஸமாக மூன்று முடிச்சுகளையும் , ஒவ்வொரு முடிச்சிலும் மூன்று பிரிகளாகவும், மூன்று முடிச்சுகளிலும் உள்ள ஒன்பது பிரிகளை நவகிரகங்களாகவும் கொண்டு பூணுலை உருவாக்கி அதில் மனிதர்களையும், தெய்வங்களையும் நல்வழிப்படுத்தும் மகத்தான பெரும் உண்மையை உள்ளடக்கி கொடுத்தார்.

இப்பெரும் பவித்திரமான பூணூலை நமது உடலில் அணிந்துக்கொள்ளவதன்மூலம் மூன்று பெரும் தெய்வ சக்திகளும், மும்மூர்த்திகளும், நவகிரகங்களும் நம்மை எல்லா நேரங்களிலும் நம்முடனிருந்து நம்மை காப்பதாக ஐதீகம். இதுவே பூணூல் அணிந்துகொள்வதன் முக்கியத்துவம்.

பூணூல் அணிந்து கொள்ள மந்திரம்: 

விக்னேச்வர த்யானம்:

சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசி வர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்ன உபசாந்தயே!

ப்ராணாயாமம்:

ஓம் பூர்: புவ: ஸுவ: தத் ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ: யோந: ப்ரசோதயாத்..!

யார் எவ்வளவு பூணுல் அணியவேண்டும்:

பிரம்மசாரிகள் 1பூணுல், 
திருமணம் ஆனவர்கள் 2 பூணுல், 
பெரியோர்கள் 3 பூணுல் என்ற எண்ணிக்கையில் அணிந்து கொள்ள வேண்டும். 

யஜ்ஞோபவீத்தாரணம்:

பூணுல் முடிச்சு வலது உள்ளங்கையில் மேலே இருக்கும் படியும் இடது கை
தீர்த்தம் இருக்கும் பஞ்ச பாத்திரத்தில் வைத்துக் கொண்டும் அல்லது வலது தொடையின் மேல் வைத்துக்கொண்டும்  கீழ் கண்ட மந்திரத்தை கூறி புதிய பூணூலை போட்டுக் கொள்ள வேண்டும்.

பூணூல் அணியும் மந்திரம்: 

*ஓம் யஜ்ஞோபவீதம், பரமம் பவித்ரம் ப்ரஜாபதேர்யத் : யத்ஸஹஜம் புரஸ்தாத்,ஆயுஷ்யம்
அக்ரியம் ப்ரதிமுஞ்ச சு’ப்ரம், யஜ்ஞோபவீதம் பலமஸ்துதேஜ: ஒம்*

பழைய பூநூலை அகற்றும் முறையும் மந்திரமும்: (ஆசமனம்):
 
உபவீதம் பின்னதந்து ஜீர்ணம் கஸ்மல துஷிதம் விஸ்ருஜாமி யசோ ப்ரஹ்ம வர்ச்ச தீர்காயுஸ் ரஸ்துமே: 

என்று ஜெபித்து பழைய பூணுலைக் கால் வழியாக கழற்றிவிடலாம்.  

_____________________

இன்று சிலர் எண்ணுவது போன்று பூணுல் வெறும் ப்ராமணமக்கள் மட்டும் அணியும் ஒன்று அல்ல. முன்காலத்தில் அந்தணர்கள் மட்டுமின்றி, வணிகர்கள், மன்னர்கள், சூத்திரர்கள் முதலான அனைத்து பிரிவு மக்களும் பெண்களும் உட்பட பூணுல் தரித்து வந்தனர். 

 பூணுல் அணிந்தால் கடைபிடிக்க வேண்டிய நியமங்களின் காரணமாக முதலில் பெண்கள் இதிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதே காரணத்திற்காகவும் தங்கள் வாழ்கை முறை வசதிக்காகவும் சில பிரிவு மக்களும் இதிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டனர்.

பூணூல் அணிந்து கொள்வது ப்ராமண தன்மையை பெறுவதற்கான ஒன்று. ப்ராமணம் என்பது மனிதன் தன் நிலையிலிரிருந்து  தண்னை உயர்திக்கொள்ளும் ஒரு முயற்சி மட்டுமே தவிர அது ஒரு குல பிரிவு அல்ல.

பிராமணர்களின் தன்மைகளை பகவத் கீதை இப்படி சொல்கிறது.

"அமைதி, சுயக்கட்டுப்பாடு, தவம், தூய்மை, சகிப்புத்தன்மை, நேர்மை, அறிவு, பகுத்தறிவு, ஆத்திகம் ஆகிய இயற்கையான தன்மைகளில் பிராமணர்கள் செயல்படுகின்றனர்."- 18.42

இதன் மூலம் பூணூல் சாதி அடையாளமல்ல. மனிதன் மேம்பட்ட அறிவை பெற்று புதிய மனிதனா மாற வழிவகுக்கும் ஒன்று என்பது புலப்படுகிறது. வேதம் யக்ஞோபவீதத்தை இரு பிறப்பாளர் (த்விஜர்) என்று கூறுகிறது. பூணூல் அணிவதற்கு முன் ஒரு பிறப்பும் பூணூல் அணிந்து ஞானம் பெற்ற பிறகு ஒரு பிறப்பும்.   இந்த சடங்கு காலப்போக்கில் சுருங்கி சில குலத்திற்கு மட்டுமான அடையாளமாக கருதி கருத்து உருவாக்கம் ஏற்பட்டுவிட்டது. 

மனு சட்டத்திலும் ஒரு வசனம்:

"சூத்ரோ ப்ராமணதாமேதி ப்ராமணஸ்சைதி சூத்ரதாம்
க்ஷத்ரியாஜ்ஜாதவேதம் து வித்யாத்வைச்யாத்ததைவ ச"

பொருள் : –  ‘சூத்திரன்  பிராமணனாகலாம்;  பிராமணன்  சூத்திரனாகலாம்; க்ஷத்ரிய  மற்றும்  வைசிய  வர்ணங்களைச்  சார்ந்தவர்களும் அவர்தம்  மகன்,  மகள்களும் வேறு  வர்ணத்தை  அடையலாம்’. யாரும் வேதம்  ஓதும்  பிராமணர்கள்  ஆகலாம்  என்று சொல்கிறது.
  
சைவ சமயத்தில் சூத்திரரும் பூணூல் அணியலாம் என்றே சிவாகமங்கள் கூறுகின்றன.சிவாகம கருத்துக்களை தமிழுக்கு மொழிபெயர்த்தருளிய ஸ்ரீமத் நிகமஞான சம்பந்த தேசிகர் என்றும் ஸ்ரீமத் மறைஞானசம்பந்த தேசிகரென்றும் அழைக்கப்படும் சைவ சித்தாந்த ஆச்சாரியானவர்,தமது நூலான "சைவ சமய நெறி"-ல் இவ்வாறு கூறியுள்ளார் :

"தர்ப்பணத்தி லர்ச்சனையி லாகுதியி லுந்தரிக்க
விற்பயிலுஞ் சூத்திரரிந் நூல்" 
(சைவ சமய நெறி  : ஆச்சாரியரிலக்கணம் : 52

இல்லத்தில் ஒழுகின்ற சூத்திரர்,தர்ப்பண காலத்திலும் பூசாகாலத்திலும் அக்கினி காரிய காலத்திலும் இப்பூணூலைத் தரிக்கக் கடவர்

உம்மையால் தீக்ஷா காலமும் உற்சவகால முதலியனவுங் கொள்க.

இவரு ணயிட்டிகனெப் போதுந் தரிக்க
வவனியிலு மாசையறுத் தால் 
(சைவ சமய நெறி  : ஆச்சாரியரிலக்கணம் : 53  

இச்சூத்திரருள் நயிட்டிகப் பிரம்மச்சாரியானவன் மண்ணாசை பொன்னாசை பெண்னாசை என்கின்ற மூவகை ஆசைகளையும் நீக்கியிருப்பானாகில் எக்காலத்தும் பூணூல் தரிக்கக் கடவன் 

ஆக, சூத்திரரும் பூணூல் அணியும் மரபு சைவத்தில் உண்டு என்று தெளிவாகியுள்ளது.

கட்டுரை:  செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமி, MCA, PGDBA, CCNP, ITIL, ISO/IEC 20000
தேவாங்க வேர்ல்ட் 

Image: 
Categories: 
Share Share
Scroll to Top