Deprecated: Array and string offset access syntax with curly braces is deprecated in /home4/devan1ay/public_html/sites/all/modules/entity_translation/includes/translation.handler.inc on line 1685
ஸ்ரீசைலம்  | Devangaworld

88929 25504
 
  • Total Visitors: 3750545
  • Unique Visitors: 309610
  • Registered Users: 35961

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூனமூர்த்தி கோவில்:- 

இறைவர் திருப்பெயர் : மல்லிகார்ச்சுனர், ஸ்ரீசைலநாதர், சீபர்ப்பதநாதர்.

இறைவியார் திருப்பெயர் : பிரமராம்பிகை.

தல மரம் : மருத (அர்ஜுனம்) மரம்திரிபலா மரம்.

தீர்த்தம் : பாலாழி முதலான பல தீர்த்தங்கள் உள்ளன.

வழிபட்டோர் : தேவாரப் பாடல்கள் :

1. சம்பந்தர் - சுடுமணி யுமிழ்நாகஞ் (1-118);

2. அப்பர் - கன்றினார் புரங்கள் (4-58);

3. சுந்தரர் - மானும்மரை இனமும்மயில் (7-79).

நம் இனமுதல் தோன்றலானதேவலரின் ஏழாவது அவதாரமான

தேவதாசமைய்யன் அவர்கள்தான் 365 நாட்கள் நெய்ததுணியை 

(கம்மி பாவடலு) கோவிலில் தான் மஹாசிவராத்திரி நாளில் கொடியாகஏற்றி 

தன் சக்தியின் மூலம்தாம் கட்டகூடிய கோவிலில்செளடாம்பிகையுடன் 

இராமலிங்கராக அருள்பாலிக்க மல்லிகார்ஜூனமூர்த்தியிடம் வரம் பெற்றார். 

அந்த கோவிலில் இருந்து தான் சௌடாம்பிகை அம்மனை ஆமேத நகர் 

அழைத்து வந்ததாக நமது புராணங்கள் கூறுகின்றது. அப்படி அன்னையை

அழைத்து வரும் பொழுது ஏற்பட்ட சிறு தவறினால் நம் அன்னை 

நீரில்மறைந்து விட்டாள். அப்பொழுது தான் நாம் கத்தியால் 

நம்மை வருத்தி நம்அன்னையை அழைக்க ஆரம்பித்தோம் .

இன்றும் அதனை  நினைவு படுத்தும் விதத்தில் நாம் அலகு சேவை 

செய்துவருகிறோம். ஶ்ரீஇராமலிங்க செளடாம்பிகையாக வழிபட 

முதன் முதலில் வரம் பெற்றஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன மூர்த்தி 

கோவிலை மறந்து விட முடியுமா.இக்கோவில் தேவாங்கர்களுக்கு 

முக்கிய ஸ்தலம் அல்லவா ?

தல வரலாறு : 

வட நாட்டுப் பாடல் பெற்றத் தலங்களில் இது முதலாவது தலமாகும்.

மக்கள் வழக்கில் தற்போது "ஸ்ரீசைலம்" என்று வழங்குகிறது.

சந்திரவதி என்னும் பெண் அடியவர், மல்லிகை மலர்களைக் கொண்டு

இப்பெருமானைஅர்ச்சித்து வழிபட்டதால் இத்தலத்து இறைவன்

மல்லிகார்ச்சுனர் என்று பெயர் பெற்றார்.சிலாத முனிவர்

தவஞ்செய்த தலமாதலின் இஃது ஸ்ரீசைலம் எனப்படுகிறது.

நந்தியம்பெருமான் இத்தலத்தில் தவஞ்செய்து இறைவனைச்

சுமக்கும்ஆற்றலைப் பெற்றார் என்றும்; நந்தியே 

இங்கு மலையாக இருந்து பெருமானைத்

தாங்குகிறார் என்றும் தலபுராணம் கூறுகிறது.

The History

சிறப்புக்கள்

பன்னிரண்டு "ஜோதிர்லிங்கங்களுள்" இத்தலமும் ஒன்று.

பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களாவன

1. "சோமநாதம்" - குஜராத்திலும்,

2. வைத்தியநாதம்,

3. பீமசங்கரம்,

4. நாகேசம்,

5. த்ரயம்பகம்,

6. குஸ்மேசம் முறையே - மகாராஷ்டிரத்திலும்,

7. ஸ்ரீசைலம் - ஆந்திராவிலும்,

8. ஓங்காரம்,

9. உஜ்ஜையினி முறையே - மத்தியப் பிரதேசத்திலும்,

10, விச்வேசம் (வாரணாசி),

11. கேதாரம் முறையே - உத்திரப் பிரதேசத்திலும்,

12. இராமேசுவரம் - தமிழ்நாட்டிலும் உள்ளன.

சக்தி பீடத்தில் இத்தலம் பிரமராம்பாள் பீடமாகப் போற்றப்படுகிறது.

சம்பந்தரும், சுந்தரரும் திருக்காளத்தியை வணங்கிய பின்னர், அங்கிருந்தே

வடக்கு நோக்கித்தொழுது பாடிப் பரவினர். அப்பர் பெருமான் தம்முடைய

கயிலையாத்திரையில் இத்தலத்திற்கு எழுந்தருளி வழிபட்டுப் பாடியுள்ளார்.

சம்பந்தர், அப்பர் திருப்பதிகங்களில் இத்தலம் "திருப்பருப்பதம்" என்றும்,

சுந்தரர் திருப்பதிகத்தில் "சீபர்ப்பதம்" என்றும் குறிக்கப்படுகிறது.

தேவார திருமுறைப் பதிகங்களைப் பெற்றுள்ள மூன்று ஜோதிர்லிங்கத்

தலங்களுள் இத்தலமும் ஒன்று. ஏனைய இரண்டும் இராமேசுவரம் மற்றும்

திருக்கேதாரம் ஆகும்.

இத்தலம் அர்ஜுனத் தலமாகும். மருதமரத்தைத் தலமரமாகக் கொண்டுள்ள

தலங்கள் மூன்று; அவை அர்ஜுனத் தலங்கள் எனப்படுகிறது. இத்தலம்

அவற்றுள் மல்லிகார்ஜுனம் எனப்படும். ஏனையவை (1) திருவிடைமருதூர் -

மத்தியார்ஜுனம், (2) திருநெல்வேலி மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திற்கு

அருகில் உள்ள திருப்புடைமருதூர் - புடார்ச்சுனம் என்பனவாகும்.

மேதி, ரவி, ஜுவி என்னும் மூன்று மரங்களின் சேர்க்கையே

(மற்றொரு தலமரமான)திரிபலா மரம் என்பர். தத்தாத்ரேயர்

இம்மரத்தினடியில் தவஞ்செய்ததால்இஃது தத்தாத்ரேய விருக்ஷம்

என்றும் சொல்லப்படுகிறது. இம்மரம் விருத்தமல்லிகார்ஜுனர்

கோயிலில் உள்ளது. [இங்கு கரவீரம் என்னும் பழமையான

மரமும் உள்ளது.

கோயில் அமைந்துள்ள இம்மலையடிவாரத்தில் கிருஷ்ணா நதி ஓடுகிறது;

இந்நதியைப் பாதாள கங்கை என்று கூறுகின்றனர்.

இத்தலத்திற்கு அருகில் நந்திமலை, நந்தியால் உள்ளன. இம்மலைப்பகுதியை

"பூகயிலாயம்" என்று புகழ்வர் வீரசைவர்கள்.

இம்மலையில் எட்டு சிகரங்களும், ஒன்பது நந்திகளும் உள்ளன. அவை முறையே,

சிகரங்களாவன -

1. வைடூரிய சிகரம்,

2. பரவாளி சிகரம்,

3. ரெளப்ய சிகரம்,

4. மாணிக்கச் சிகரம்,

5. மரகத சிகரம்,

6. பிரம்ம சிகரம்,

7. க்ஷேமா சிகரம்,

8. வஜ்ர சிகரங்கள் ஆகும்;

நந்திகளாவன -

1. பிரதம நந்தி,

2. நாக நந்தி,

3. விநாயக நந்தி,

4. கருட நந்தி,

5. சிவ நந்தி,

6. மகா நந்தி,

7. சூரிய நந்தி,

8. விஷ்ணு நந்தி,

9. சோம நந்தி என்பனவாகும்.

அவ்வாறே இங்கு

1. பிரமேஸ்வரம்,

2. ஜனார்த்தனேஸ்வரம்,

3. வருணேஸ்வரம்,

4. ஹேமேஸ்வரம்,

5. சப்தகோடீஸ்வரம்,

6. மோக்ஷேஸ்வரம்,

7. இந்திரேஸ்வரம்,

8. அக்னேஸ்வரம்,

9. குக்குடேஸ்வரம் என்று ஒன்பது கோயில்களும் உள்ளன.

இக்கோயிலில் பாண்டவர்கள் கட்டியதாக சொல்லப்படும்

ஆறு ஆலயங்கள் மேற்குப் பிரகாரத்தில் உள்ளன.

இங்கு சஹஸ்ரலிங்கேசுவரர் கோயில், அன்னபூரணி கோயில்,

பஞ்சநதீஸ்வரர் கோயில், பளிங்குக் கல்லாலான சண்முகர் ஆலயம் ஆகியன

தரிசிக்கத்தக்கன.

ஜோதிர்லிங்கத் தலமான இத்தலத்தில் சிவராத்திரி வழிபாடு

மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

இங்குள்ள கல்வெட்டுக்களால், அன்னதானத்திற்குக் கட்டளைகள்

அமைத்தது, கோயிலில் திருப்பணிகள் செய்தது, தீர்த்தக்குளம் வெட்டியது,

கோயில் பணியாளர்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தது முதலான பல

செய்திகளை அறிய முடிகிறது.

இங்குள்ள கல்வெட்டுக்கள் அனைத்தும் விஜயநகர மன்னர்கள், சாளுவகாகதீய

மன்னர்கள் காலத்தியவை என்று சொல்லப்படுகிறது.

அமைவிடம்

மாநிலம் : ஆந்திரா 

ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தில் நந்தியாலுக்கு அருகில் உள்ளது.

திருப்பதியிலிருந்து 500 கி. மீ. தொலைவாகும். சென்னையிலிருந்தும்

ஸ்ரீசைலத்திற்கு பேருந்து வசதி உள்ளது. 

தேவாங்க சத்திரம் தொடர்பு கொள்ள :

தொடர்பு கொள்ள : 

Srisaila Devasthanam
Srisailam 518101.
Phone: 08524 - 288883,288885, 288886, 288887,288888.
E-mail: eo@srisailamtemple.com

கோவில் இணையதளம்  : http://www.srisailamonline.com/

 இன்றும் அங்கு சிவராத்திரி அன்று நம் தேவாங்கர்கள் தான் 

கொடிஏற்றுகின்றனர்.மேலே உள்ள படத்தில் சிவராத்திரி அன்று நம்

தேவங்கர்கள் நெய்த துணியைதோரணமாக கட்டியிருப்பதை பாருங்கள்.

கோபுர உச்சியிலிருந்து வெள்ளைதுணி மூன்று வரிகளாக வருவதை

பாருங்கள்.அதனால் அங்கு சென்று அருள் பெறுவோம்.

Categories: 
Share Share
Scroll to Top