88929 25504
 
  • Total Visitors: 3750679
  • Unique Visitors: 309645
  • Registered Users: 35961

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

படவேடு சிம்மாசனம் : 

படவேடு சிம்மாசனம் கலியுகாதி 4609 பிரபவ ஆண்டில் வரதந்து மகரிஷி கோத்திரத்தைச் சேர்ந்த திரு பண்டிதாராத்ய சுவாமிகள் வழி வந்த ருத்ரமூர்த்தி சுவாமிகளால் நிறுவப்பட்டது. திரு பண்டிதாராத்ய சுவாமிகள் வழிவந்த பரம்பரையினர் இப்பொழுது படவேட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஒண்ணுபுரம் என்னும் கிராமத்தில் வசித்து வருகின்றனர். சோணாசலமடம் முன்னர் திருவண்ணாமலையில் இருந்தது இப்போது இது படவேடு என்னும் ஊரில் செயல்பாட்டில்  இருக்கின்றது. 

பண்டிதாராத்யரின் தாயாரான பொப்பாதேவி அவர்கள் பெனுகொண்டா என்னும் நகரைச் சேர்ந்தவர் ஆவர். பெனுகொண்டா நகரில் நிகழ்ந்து வந்த போரின் காரணமாக கருவுற்றிருந்த அந்த அம்மையார் அந்நகரை விடுப் படவேடு நகரை வந்தடைந்தார்.  படவேடு நகரை  வந்தடைந்து சிறிது காலத்தில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த ஆண் குழந்தைக்கு பண்டிதாராத்ய என்று பெயர் சூட்டி வளர்த்தார். அக் குழந்தையை முறையாக குருகுலத்தில் சேர்த்து வேதாகமம் கட்க பணித்தார். பின்நாளில் பண்டிதாராத்ய ஸ்வாமி வேதாகம சாத்திரங்களைக் முறையாக கற்று ஒரு குருநாதராய்த் திகழ்ந்தார். அவர் பலருக்கும்  பஞ்சாட்சர உபதேசமும் சிவதீட்சையும் அளித்து நமது குலத்தையும் தர்மத்தையும் காத்து  பெரும்புகழோடு இருந்தார். இவர் பெரும்புகழோடு இருந்த காலத்தில் வள்ளாள மகாராஜன் பண்டிதாராத்ய ஸ்வாமி அவர்களின் புகழ் பலரும் சொல்ல கேட்டு அவரை தரிசித்து லிங்கபூஜை உபதேசம் வழங்கி அருளுமாறு கேட்டுக்கொண்டார். மன்னனின் வேண்டுகோலுக்கு இசைந்து லிங்கபூஜை செய்யும் விசேஷ தீட்சையும் உபதேசமும் அருளினார். 

தீட்சை அளிக்கும் உரிமை பண்டிதாராத்ய ஸ்வாமிக்கு எப்படிவந்ததென்று  ஒருசமயம் சில மறையவர்கள் சிலர் ஸ்வாமிகளிடம் வாதம் செய்தனர். அதற்கு ஸ்வாமிகள் தேவல மகரிஷியின் மரபில் வந்த எமக்கின்றி மற்ற யருக்கு உள்ளதென்று வாதிட்டார் . அதற்கு அம்மறையவர்கள் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றிய நாங்கள் மற்ற வருணத்தாரினும் மேலானவர்கள் என்றும் நாங்களே தீட்சையளிப்பதற்கும் உபதேசம் செய்வதற்கும் உரியவர்கள் என்றும் மற்றவர்களுக்கு அந்த தகுதி இல்லை என்றும் வாதிட்டனர். அதற்குச் சுவாமிகள் ' பிராம்மணவம்ச முனிவர்கள்' தவளை வயிற்றில், நரிவயிற்றில், வண்ணாத்தி செம்படவச்சி முதலியவர்களின் வயிற்றில் தோன்றியதாக வரலாறு இருக்கிறதே ஒழிய இவர்கள் எவரும் பிரம்மாவின் முகத்திலிருந்து தோன்றியதாக வரலாறு இல்லை என்றும், தேவல மஹரிஷியும் தேவாங்க குலமும்   சிவபெருமானின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர்கள். அதனால் நாங்களே இயல்பான பிராம்மணர்களாவோம் என்றும் . எங்கள் மூதாதை தேவல மஹரிஷிதான் முதல் முதலில்  பிராம்மணர்களுக்கும் மற்றவர்களுக்கும் மந்திரோபதேசத்தோடு பூணூலை அணிவித்தார் அருளினார் என்பதையும் சுட்டிக்காட்டினார். தேவல மஹரிஷி தமது 6 வது அவதாரத்திலும் எல்லாருக்கும் மந்திரோபதேசமும் சிவதீட்சையும் அளித்துள்ளார். இம்மேலான செயல் இப்பரம்பரையில் தொடர்ந்து வந்திருக்கும் வழக்கமென்றும். இவர்கள் வழி வந்த நானும் தீட்சை அளிக்கும் உரிமை இயல்பாகவே பெற்றுள்ளேன் என்றும். உபதேசம் செய்வதற்கும் தீட்சையளிப்பதற்கும் தேவாங்கப் பிராம்மணர்களாகிய எங்களுக்கே இயல்பான உரிமை என்றும் கூறி அவர்களுக்கு விளக்கம் அளித்தார். அவர்களும் பண்டிதாராத்யரின் உரையின்கண்  தெளிவு பெற்று அவரை வணங்கி அவரிடம் பஞ்சாட்சர உபதேசமும் சிவ தீட்சையும் பெற்றுக் கொண்டனர். 

இவரிடம் வாதம் செய்ய வந்த சமயவாதிகள் பலரும் இவருடனான வாதத்தில் தோற்றுச் சிவதீட்சை பெற்றுச் சைவராக மாறினர். ஸ்வாமிகளின் காலத்திற்கு பின் அவருடைய பரம்பரையினர் அந்த குருபீடத்தை நிர்வகித்தும்  சைவநெறியைப் போற்றியும்  வந்தனர். 

திருவண்ணாமலையில் செஞ்சி மன்னன் ஜெயசிங்கனுக்கும் ஆற்காடு நவாபிற்கும் நடந்த போரில் நவாபின் போர் வீரர்கள் போர் மரபு மீறி செய்த அட்டூழியங்களுக்கு அஞ்சிப் பல்லாயிரம் தேவாங்க மக்கள் திருவண்ணாமலையை விட்டுப் படவேடு நகருக்கு  குடிபெயர்ந்தனர். இங்கு குடியேறிய பண்டிதாராத்ய பரம்பரையினரில் ஒருவராகிய குரு ருத்ரமூர்த்தி சோணாசலமடத்தை நிறுவினார். இந்த பரம்பரை 3966 முதல் 5049 வரை 32 குருமார்களைக்கொண்டு தொடர்ந்து வருகின்றது. 32 வது பீடாதிபதி குரு சாம்பலிங்கமூர்த்தி சுவாமிகள் ஆவார்.

Categories: 
Share Share
Scroll to Top