88929 25504
 
  • Total Visitors: 3750438
  • Unique Visitors: 309572
  • Registered Users: 35960

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

கொரோன தொற்றுநோயை ஒட்டி ஹம்பி ஹேமகூட காயத்ரி பீட தேவாங்க ஜகத் குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தாயானந்தபுரி ஸ்வாமிகளின் உரை: 
 
அனைத்து பக்தர்களுக்கும் சார்வரி ஆண்டு மற்றும் உகாதி பண்டிகை நல்வாழ்த்துக்கள். இன்று இந்த விடியோவை தயாரிப்பவர் செந்தில் குமார் ஆவார்.நாம் அனைவரும் அறிந்தது போல் சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்று நோய் நம் நாட்டில் பரவாமல் தற்காத்துக்கொள்ளும் பொருட்டு நாம் அனைவரும் விழிப்புணர்வு அடைய வேண்டி இந்த காணொளியை பதிவு செய்கிறோம்.

அன்பர்களே நாம் அனைவரும் உகாதி பண்டிகையின் போது வேம்பு ,வெல்லம் உண்பது வழக்கம் .வேம்பு துன்பத்தையும் வெல்லம் இன்பத்தையும் குறிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறியிருக்கின்றார்கள்.இது ஒரு பண்பாடு .இன்று மிக மோசமான தொற்றுநோய் நம் நாடு மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவி வருகின்றது .அதனால் நாம் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டியது நமது கடமை .

நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாட்டு மக்கள் அனைவரையும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பலமுறை வேண்டிக்கொண்டார் .முன்பு புராணத்தில் கேட்டது போல் ரக்தபீஜாசுரா என்னும் அரக்கன் இருந்தான் .அவனுடைய ஒரு துளி ரத்தம் சிந்தினால் அதிலிருந்து ஆயிரக்கணக்கான அரக்கர்கள் தோன்றினார்கள் என்று கேட்டிருக்கின்றோம் .அதை இப்பொழுது நம் கண்களால் காண்கிறோம் .

இது தொடுவதால் பரவும் தொற்றுநோய் .இந்நாட்டு மக்கள் அனைவரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் .மக்கள் தொகைக்கு ஏற்ப விஞ்ஞானமும் வளர்ச்சி அடைந்துள்ளது .அந்த விஞ்ஞானத்திற்க்கே சவால் விடும் வகையில் உள்ளது இந்த நோய் .இந்நோயை தடுக்க நாம் அனைவரும் மனதால் முயற்சி செய்யவேண்டும் .நம் குடும்ப நன்மைக்காக நம் அனைவரின் நன்மைக்காக சுக சந்தோஷத்திற்காக நம் பிரதமர் அறிவுரையை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்பது நம் அனைவரின் கடமையாகும் .

அதனால் இந்த தொற்றுநோயை விரட்ட நாம் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வராமல் குடும்பத்துடன் இருப்போம் .இந்தக் கொடிய நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.அதனால் நாட்டு மக்களுக்கு பரவாமல் தடுக்கும் பணியில் நம் நாட்டு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர் .அவசியம் இல்லாமல் நாம் பயணிப்பதை தவிர்ப்போம் வீட்டிலேயே இருப்போம் .இந்த தொற்று நோயை தடுப்போம் என்னும் செய்தியைச் சொல்லி என் உரையை முடிக்கின்றேன்.

விடியோவை காண இந்த லிங்கை சொடுக்குங்கள்: https://www.youtube.com/watch?v=BRHlYgaPHx4

Image: 
Categories: 
Share Share
Scroll to Top