88929 25504
 
  • Total Visitors: 3745560
  • Unique Visitors: 308188
  • Registered Users: 35949

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

கங்கணத்தின் வரலாறு : 

நன்றி : காடுபட்டி சௌடாம்பிகா இளைஞர் அணி

நன்றி : muthukamalam.com/essay/community/p5.html

தேவலர், தாம் சிவபெருமானது அருட்கட்டளைப்படி ஆடைகள் நெய்ய இருப்பதாகவும் தாம் நெய்யும் ஆடைகளை தேவர்கள், மக்கள் யாவருக்கும் வழங்கவேண்டி இருப்பதால் எவ்வளவு வழங்கினாலும் குறையாது வளர்ந்து கொண்டே இருக்கவேண்டும், யார் எந்த நிறத்தில் விரும்பினாலும் அந்த நிறத்தில் ஆடை அமையவேண்டும் என்று சௌடேஸ்வரி அம்மனிடம் வேண்டினார்.

தேவலரின் தன்னலமற்ற வேண்டுகோளை கேட்டுச் அன்னை மகிழ்ச்சி அடைந்து தன்னிடம் இருந்த ஒரு பொன் வளையளை(கங்கணத்தை) தேவலரது வலக்கரத்தில் அணிவித்தாள் அதை கையில் அனிந்துகொண்டு தொழில் செய்தால் நினைத்தவாறு தொழில் வளரும் செல்வம் கொழிக்கும் புகழும் சிறப்பும் பெருகும் என்று கூறிமறைந்தாள்.. 

இதனாலேயே நாம் திருவிழா நடத்தும்பொழுது திருவிழா சீறும் சிறப்புமாக நடத்தவேண்டி மஞ்சளைநூலில் கட்டி அதைஅம்மன் நமக்கு வழங்கிய அருள் கங்கணமாய் எண்ணி பயபக்தியுடன் நாம் அணிந்துகொள்கிறோம்.

கங்கணம் கட்டிகொண்டால் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் :

1.மது, மாமிசம் தவிர்க்கவேண்டும்

2.தோல் பொருட்கள் உபயேகிக்ககூடாது

3.காலணி தவிர்ப்பது நலம்

4. மஞ்சள் வண்ணஆடை அணிவது நலம்

5. காலை, மாலை அன்னையை வணங்கி நெற்றியில் பண்டாரம் அணிந்துகொள்வது நலம்.

6.மண், பெண் , பொருள் மீது கொண்ட ஆசையை விலக்கவேண்டும்,

மேலும் கங்கணம் கட்டிகொண்டவரின் குடும்பம் வீடுகளை புனிதபடுத்தி, மனம், வாக்கு, காயம் என்னும் மூன்றிலும் தூய்மையாக இருக்க வேண்டும்
விழாவின் போது புதுபூநூல் அணிந்து அம்மனை தரிசிக்க வரும்பொழுது மட்டும் ஆடவர்கள் மேல் சட்டை அணியாமல், இடுப்பில் துண்டு உடுத்தி அன்னையை வணங்கு வேண்டும்.

இவ்வாராக கங்கணம் அணிந்து, விரதம் இருந்து அன்னையை வணங்கிணால் நினைத்தது நினைத்தபடி நடக்கும் என்பது சான்றோர் வாக்கு..
இவை அனைத்தும் நம் முன்னோர்கள் நமக்கு கூறியது காலத்திற்கு எற்றால் போல் இதில் சிலவிதிமுறைகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கங்கணம் கட்டும் போது அரணை ஒட்ட தேவையான பொருட்கள்

அரணை முட்டிகள் - 6
முச்சளம் - 6
மொந்தை - 4
ஊசி மூடிகள் - 2
மண் தீபங்கள் - 7
மண் தூபக்கால்- 2

1. பூஜை அறையை சாணத்தால் மெழுகிக் கோலமிட்டு அதன் மேல் பச்சரிசியை பரப்ப வேண்டும். பூஜையில் வைக்கப்படும் அரணை முட்டிகள் மற்றும் மொந்தையில், பச்சை பயறு, அரிசி, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, விபூதி, குங்குமம், பூ ஆகிய பொருட்களை சிறிது போட்டு வைக்க வேண்டும்.

2. அரணை முட்டிகளை முச்சளங்களினால் கவிழ்த்து மூட வேண்டும். மாவிளக்கு 7 தயார் செய்ய வேண்டும். அவைகளில் இரண்டினை முச்சளத்தின் மீதும் மீதி 5விளக்குகளை மொந்தையின் முன்புறம் வரிசையாக வைக்க வேண்டும். விளக்குகளுக்கு நல்லெண்ணெய் மட்டும் பயன்படுத்த வேண்டும்.

3. கங்கணம் கட்டும் பூஜை அறையில் கத்திரிக்காய் -3, வெள்ளைப் பூண்டு -3, அச்சு வெல்லம், மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, மல்லிகை பூ ஆகியவற்றை கோர்த்து மூன்று செட் தயார் செய்து அவைகளை வரிசையாக தொங்கவிட வேண்டும். குண்ட்டை (படமரம்) வைத்து அதன் மீது வண்ணான் மாத்து போட வேண்டும்.

4. கம்பளியில் செட்டிமைக்காரருக்கு வலதுபுறம் மணமகன் வீட்டாரும், இடதுபுறம் மணமகன் வீட்டாரும், அமர வேண்டும். முதலில் மணமகன் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும். பிறகு மணமகள் வீட்டார் சம்பந்திக்கு சந்தனம் தடவ வேண்டும்.

5. முதலில் மணப்பெண் வீட்டினரும், மணமகன் வீட்டினரும், மூன்று முறை தனித்தனியாக தங்களின் வங்குசம், கோத்திரம், வம்சப் பெரியோர்களின் பெயர், மணமக்களின் பெயர் ஆகியவைகளை மூன்று முறை கூறி மூன்றாவதாக சொல்லும் போது மணப்பெண் கொடுப்பதாக மணமகன் வீட்டாரிடம் கூறி, தாம்பூலம் மாற்றிக் கொள்ள வேண்டும்.

6. கம்பளியில் அமர்ந்திருப்பவர்களுக்கு சந்தனம் கொடுத்து தாம்பூலம் வழங்க வேண்டும்.

கங்கணம் கட்ட தேவையான பொருட்கள் : 

1. மஞ்சள்துணி, மஞ்சள் கொம்பு, கம்பளி கயிறு இரும்பு வளையம், வெற்றிலை பாக்கு, மணமகன் கையில் வைத்துக் கொள்ள ஜம்புதாடிக் கத்தி.
2. கம்பளியில் செட்டிமைக்காரர் முன்னால் வைக்கப்பட்டுள்ள ஓலைப் பேழையில் இருக்க வேண்டிய பொருட்கள்.வெற்றிலை பாக்கு, பூ 21 செட், எலுமிச்சம் பழம் 2, வாழைப்பழம் 2, சந்தனக் கிண்ணம், அட்சதை, கற்பூரம், ஊதுபத்தி.

3. செட்டிமைக்காரர் வசம் மணமக்கள் வீட்டினர் மஞ்சள் முடிப்பு கொடுத்தல்.

4. மணமகன் வீட்டினர் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ, பணம் வைத்து முடி போட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும்.

5. மணமகள் வீட்டார் மஞ்சள் துணியில் மஞ்சள் கொம்பு, வெற்றிலை பாக்கு, பூ வைத்து முடிபோட்டு செட்டிமைக்காரரிடம் கொடுக்க வேண்டும்.

6. செட்டிமைக்காரர் இரண்டு மஞ்சள் முடிப்புகளில் பணம் உள்ள மஞ்சள் முடிப்பினை அவிழ்த்து குறிப்பிட்ட பணத்தை எடுத்துக் கொண்டு அதை முடி போட்டு மணமகள் வீட்டாரிடம் கொடுத்து, பணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். மணமக்கள் சொந்தக்காரர்கள் செட்டிமைக்காரரிடம் இருந்து மஞ்சள் முடிப்பினன பெற்றுச் சென்று மணமக்களுக்கு கங்கணம் கட்ட வேண்டும்.

7. மணமக்கள் செட்டிமைக்காரர் மற்றும் பெரியோர்களை வணங்க வேண்டும்.

8. மணமக்கள் கங்கணம் கட்டிக் கொண்ட பிறகு, மணப்பந்தலை விட்டு வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது.

9. அட்சதையைக் கம்பளியில் உள்ளவர்களுக்கு மட்டும் வழங்க வேண்டும்.

Image: 
Categories: 
Share Share
Scroll to Top