88929 25504
 
  • Total Visitors: 3745542
  • Unique Visitors: 308181
  • Registered Users: 35949

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).
  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

நந்தவரம்செளடேஸ்வரி தேவி கோவில்:- 

 

 

கோவில் அமைந்துள்ள ஊர்

 நந்தவரம்,

பங்கனப்பள்ளி ,

கர்நூல் மாவட்டம் ,

ஆந்திரா மாநிலம் - 518124

நந்தவரம் கிராமம் பன்யம் மற்றும் பங்கனப்பள்ளிக்கு இடையில் அமைந்துள்ளது. 

பங்கனப்பள்ளி [11 கி.மீ]

நந்தியால் [32 கி.மீ.]

மஹாநந்தி  [49 கி.மீ.]

கர்னூல் [75 கி.மீ.]

ஹைதெராபாத் [287 கி.மீ.]

பெங்களூர் [348 கி.மீ.]

 

கோவிலின் வரலாறு  : 

இந்த ஆலயம் நாலாயிரத்து நூறு (4100) ஆண்டுகளுக்கு முற்பட்டது.

 

 

நந்த வரமந்து நிலகொன்ன நைகதாம்பா ' என்ற எண்ணற்ற

தண்டகங்களில் நாம் கூறக் கேட்டிருப்போம். இத்தண்டக வரிகளானது

கீழ்க்காணும் புராணத்திலிருந்து அமையப்பட்டுள்ளது.

 

 

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நந்தவரம் தலைநகராகக் கொண்டு

நந்தராஜு என்பவர் ஆண்டு வந்தார். அவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்கும் முன்

அவருடைய தந்தை வுட்டுங்க பூஜுடு என்பவற்றின் கனவில் தேவி தோன்றி வர

உள்ள காலத்தில் அவர் மகன் தத்தாத்ரேயருடைய அருளைப் பெற்று ஆட்சி

அமைப்பார் எனக் கூறி இருந்தாராம். அது போலவே நடந்தது. மன்னனுக்கு

வயதாகியதும் அவர் தன மகன் நந்தராஜுவிடம் அட்சிப் பொறுப்பை தந்தார்.

நந்தராஜுவும் ஆட்சியில் வந்ததும் அவர் பல ஆலயங்களுக்கும் சென்றவண்ணம்

இருந்தார் . எப்போதும் தத்தாத்ரேயருடைய மந்திரத்தை முணுமுணுத்தபடியே

இருப்பாராம். தன் நாட்டிலேயே தத்தாத்ரேயருடைய ஆலயம் எழுப்பி அவரை

அங்கு வழிபாட்டு வந்தார். நந்தராஜுவுடைய பெற்றோர் அவர் ஆட்சியில் ஏறியதும்

அவருக்கு திருமணம் செய்துவிட்டு வனவாசம் செய்ய கிளம்பி சென்று விட்டார்கள்.

நந்தராஜு தன்னுடைய மனைவியான சசிரேகா என்பவருடன் நந்தாவரத்தின்

அருகில் ஆட்சி செய்தார். ஆட்சிக்கு வந்து ஆறு மாதம் ஆயிட்று. நந்தராஜு

தினமும் காலை எழுந்து தத்தருக்கு பூஜை செய்வார். அவருக்கு மனதில் நெடு

நாட்களாக ஒரு ஆசை இருந்தது. தினமும் நந்தவரம் இருந்து காலையில்

எழுந்து காசிக்குச் சென்று அங்கு ஆண்டவரை வணங்கிவிட்டு மீண்டும் திரும்ப

வண்டும். விமான வசதிகள் இல்லாத காலம் அது. ஆனாலும் அவர் தான் வாரனாசிக்குச்

தினமும் சென்று காசி விஸ்வநாதரையும், அன்னபூர்நியையும் வணங்கிவிட்டு மாலையில்

மீண்டும் தமது இருப்பிடத்துக்கு திரும்ப வேண்டும் என தத்தரை வேண்டியவண்ணமே

இருந்தார். வந்தார். அது எப்படி சாத்தியம் ஆகும் எனத் தெரியவில்லை. ஆனால் கடவுளின்

சித்தம் வேறு அல்லவா? தத்தர் அவருக்கு ஒரு நாள் கனவில் தோன்றி அவருக்கு மறுநாள்

காலை பூஜை அறையில் ஒரு பாதுகை கிடைக்கும் எனவும் அதைப் போட்டுக் கொண்டால்

நொடிப் பொழுதில் எந்த இடத்துக்கும் சென்று விட்டு மீண்டும் நொடிப் பொழுதில் திரும்பிவிட

முடியும் என்றும் ஆனால் அதை ரகசியமாகவே வைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.

மறுநாள் முதல் நந்தராஜு விடியற்காலம் எழுந்து குளித்தப் பின் பூஜை செய்து முடிந்ததும்

பாதுகையை மாடிக்கு எடுத்துச் சென்று அதை அணிந்து கொண்டு காசிக்கு வினாடிப்

பொழுதில் செல்வார். ஆலய தரிசனம், தீர்த்தங்களில் குளியல் என அனைத்தையும் செய்தப்

பின் மாலையில் வீடு திரும்புவார். ஒரு நாள் அவருடைய மனைவி அதைக் கண்டு பிடித்து

விட அவர் வேறு வழி என்றி அவளுக்கும் அந்த ரகசியத்தைக் கூறி அவளையும் காசிக்கு

அழைத்துப் போக வேண்டி இருந்தது. ஆனால் அங்குதான் வம்பு வந்தது. அவள் வீட்டு

விலக்காகி இருந்ததினால் அங்கு சென்றவள் கங்கையில் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது .

மேலும் அவருடன் வீடு திரும்பினால் மீண்டும் இருவரும் குளிக்க வேண்டும். ஆலயம்

சென்றுவிட்டு புனித நதியில் குளித்தபின் வீடு வந்து எப்படி மீண்டும் குளிப்பது?

அது தெய்வ குற்றமாகி விடுமே என பயந்து அழுதாள். ஆகவே அவர் அங்கிருந்த

பண்டிதர்களை என்ன செய்யலாம் என அது குறித்து ஆலோசனை கேட்க அவர்களும்

தாங்கள் அந்த தீட்டிற்கு மாற்று பரிகாரம் செய்து தீட்டை விலக்குவதாகவும் அதற்கு

மாறாக அவர் நாட்டுக்கு அவர்கள் எப்போது சென்றாலும் அவர்களை பாதுகாக்க

வேண்டும் என சத்தியம் பெற்றுக் கொண்டு ஐநூறு பண்டிதர்கள் ஒன்று சேர்ந்து

தோஷ நிவாரணப் பரிகாரம் செய்தபின் சசிரேகாவின் தீட்டு விலகியது. மன்னனும்

அவர் மனைவியும் கங்கையில் குளித்துவிட்டு ஆலய தரிசனம் செய்தப் பின் வீடு

திரும்பினார்கள்.

காலம் ஓடியது. மன்னன் பண்டிதர்களை மறந்து விட்டான். நாட்டில் அனைத்தும்

நல்ல விதமாக நடந்து கொண்டு இருந்தன. அப்போது ஒரு காலகட்டத்தில்

வாரணாசியில் பஞ்சம் வந்திட அந்த நாட்டு பண்டிதர்கள் மன்னன் நந்தராஜுவை

தேடி நந்தாவனத்துக்கு வந்து அவரிடம் உதவி கேட்டனர். மன்னன் நடந்ததை

மற்றவர்களுக்கு கூற முடியவில்லை. காரணம் ஆண்டவனுக்கு ரகசியம் காப்பதாக

தந்திருந்த சத்தியம் அல்லவா. ஆகவே மன்னன் தனக்கு அப்படி எந்த வாக்குறுதியும்

தான் கொடுத்ததாக நினைவு இல்லை என்றும் அப்படி கொடுத்ததற்கு யாராவது சாட்சி

இருந்தால் அவர்களை அழைத்து வருமாறுக் கூறி அவர்களை திருப்பி அனுப்பினார்.

அவர்களோ அதற்கு சாட்சி சௌடேஸ்வரி தேவியே எனவும் அவளை அழைத்து

வருவதாகவும் கூறிச் சென்றனர். அதே நேரத்தில் மன்னன் தனது மனதில் சௌடேஸ்வரி

தேவியை தன்னை காத்தருளுமாறு வேண்டினான். அவள் வந்தால் அவளுக்கு

நந்தவரம் ஆலயம் அமைப்பதாக மனதிலேயே சத்தியம் செய்தான்.

பண்டிதர்கள் காசிக்கு சென்று கடுமையான விரதம் இருந்து , சௌடேஸ்வரி தேவிக்கு

யாகம் செய்து, பூஜைகள் செய்ய அவள் அவர்கள் முன்னால் தோன்றினாள். அவர்கள்

நடந்ததை சௌடேஸ்வரி தேவியிடம் கூற அவளும் அவர்களை திரும்ப மன்னன்

நந்தராஜுவிடம் செல்லுமாறும் தான் அவர்களை பின் தொடர்ந்து வருவதாகவும்

கூறினாள். ஆனால் அவர்கள் திரும்பிப் பார்க்கக் கூடாது என்பது நிபந்தனை.

அதைக் கேட்ட பண்டிதர்கள் நந்தவரதுக்கு  விரைவாகச் சென்று மன்னனை

சந்தித்தனர். மன்னனின் அரண்மனையில் நுழையும் முன் தேவி வந்து விட்டாளா

என்பதைப் பார்க்க திரும்பினார்கள். ஆகவே அவர்களுடன் வந்து கொண்டு இருந்த

சௌடேஸ்வரி தேவி அங்கேயே சிலையாகி நின்று விட்டாள். அந்த காட்சியை கண்ட

அனைவரும் மெய் சிலிர்த்துப் போயினர். தான் சத்தியம் செய்தபடி நந்தராஜு அந்த

சௌடேஸ்வரி தேவிக்கு நந்தவரத்திலேயே ஆலயம் அமைக்க அதுவே இன்று

நந்தவர சௌடேஸ்வரி தேவி என்ற புகழ் பெற்ற ஆலயமாக உள்ளது.

முதலில் அந்த ஆலயத்து தேவியைப் பார்கவே முடியாத அளவு உக்கிரகமாக

இருந்ததாகவும்  அதனால்  அதே போல இன்னொரு சிலையை செய்து ,

கர்பக்கிரகத்தின் மீதே இன்னொரு கற்பகிரகம் கட்டி ஆலயத்தை மேலே எழுப்பி

பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது என்பதாக கூறுகிறார்கள்.

 

வேறொரு விதமான கதை  : 

இந்த கோவில் நந்தன சக்ரவர்த்தியால் கட்டப்பட்டது. இங்கு

உள்ள சவுடேஸ்வரி அம்மன் காசி விசாலாட்சியின் அம்சமாக உள்ளார் .

இந்த சவுடேஸ்வரி  அம்மன் காசியிலிருந்து சுரங்க பாதை வழியாக ஒரே

நாளில் நந்தவரம் வந்தடைந்தார் என்பது ஐதீகம் . இங்குள்ள 60 அடி

கோபுரம் 16 ஆம் நூறாண்டில் கட்டப்பட்டது. நம்தேவாங்கர்களை 

 

முன்பொரு காலத்தில் நந்தவர அரசர் தேவியை பூஜித்து பல சித்துகளை

அடைந்தார். உபாசனை சக்தியின் அருளால் ஒவ்ஒரு நாளும் அதிகாலை

நான்கு மணிக்கு பச்சை கிளி ரூபம் எடுத்து காசிக்கு  சென்று கங்கையில்

குளித்து பூஜை செய்த பின் தன் நகரத்துக்கு திரும்பும் வரம் பெற்றிருந்தார். 

அரசரின் மணைவியான அரசி ஒருநாள் ரசர் எங்கு செல்கிறார் என்ற

விபரத்தை கூறுமாறு வலியுறுத்த தன் மந்திர சக்தி பற்றி கூற நேரிட்டது. 

அரசி தன்னையும் அழைத்து செல்லுமாறு வலியுறுத்த வேறுவழியின்றி

தன் மந்திரபிரேயோகத்தால் ராணியும் அழைத்து சென்றார். 

காசியிலிருந்த பொழுது தன் மந்திர சக்தியை இழக்க நேரிடுகிறது. 

தன் நாட்டிற்கு திரும்பமுடியாத படியால் கங்கை கரையில் கவலையுடன்

அலைந்து திரியும் பொழுது சண்டிகா ஓமம் செய்துக்கொண்டிருக்கும் 

ஒரு பிராமண குழு தங்கள் ஞானதிருஷ்டியால் அரசரின் நிலைமையை

அறிந்து கொள்கிறார்கள். 

 

அரசனின் துன்பத்தை போக்க தங்களின் யாகத்தில் பெற்ற கால் பங்கு

சக்தியை மன்னனுக்கு சூரிய பகவானை சாட்சியாக வைத்து நீர் வார்த்து

தத்தம் செய்து கொடுக்கிறார்கள். அதற்கு கைமாறாக அரசன்

பிராமணர்களுக்கு தன்னிடம் எந்த நேரத்தில்  என்ன உதவி கேட்டாலும் செய்து

தருவதாகவும் தன் ராஜ்யத்தில் ஒரு பகுதியை தருவதாகவும் சத்தியம்

செய்து தருகிறார். 

 

பிராமணர்களிடம் பெற்ற மந்திர சக்தியால் நாடு திரும்பிய அரசருக்கு அந்த  

மந்திரத்தை மீண்டும் பயன்படுத்த முடியாமல் காசியில் நடந்த

எல்லாவற்றையும் மறந்து போகிறார். 

 

பல ஆண்டுகளுக்கு பின்பு காசியில் கடும் பஞ்சம் ஏற்பட பிராமணர்கள்

அரசனை சந்தித்து உதவி பெற எண்ணி நந்தவரம் வருகின்றனர். 

பிராமணர்களை  சந்திக்கும் அரசன் தனக்கு எதுவும் நினைவுக்கு வராத

காரணத்தால் பிராமணர்கள் கூறுவதை பொய் என்று சொல்லி அவமானபடுத்தி

அனுப்பிவிடுகிறார். 

 

மனம் வருந்திய பிராமணர்கள் சவுடேஸ்வரி தேவியை தியானித்து அரசனை

சபிக்குமாறு கேட்டுக்கொள்ள அன்னையும் பிராமணர்களின் கோரிக்கைக்கு  

ஏற்ப  அரசனை தண்டிக்கிறாள். 

 

அரசன் நோயுற்று தன் தேசத்தையும் இழக்கிறான். பிராமணர்களின் வேண்டுதலுக்கு

செவிசாய்த்து தங்களை அவமானப்படுத்திய அரசனை தண்டித்த தேவியை

தங்களின் குல தெய்வமாகவே கொண்டாடினார்கள். 

 

சிறிது காலத்துக்கு பிறகு நிர்வாகத்திற்கு வந்த பிராமணர்கள் தேவாங்கர்கள் 

இந்தகோவிலின் முன் வாசல்வழியாக வர கூடாது பின்வாசல் 

வழியாகத்தான் வரவேண்டும் என உத்தரவு இடப்பட்டதால். 

அம்மனேகோபித்து கருவரையை விட்டுவெளியேறி 

தேவாங்கர்களுக்காக பின் வாசாலுக்கு நேராக  

திரும்பி அமர்ந்து தரிசனம் கொடுத்து அருளினாள். 

 

நம் தண்டகத்தில் நந்தவனம் என்று தவறாக அழைத்துக்கொண்டு

இருக்கின்றோம். இங்கே அன்னைக்கு கோயில் உள்ளது அனால் 

அன்னைகருவறையில் இல்லை தனியாக நாம் குலத்துக்காக 

நிலத்தில் சுரங்கம்அமைத்து அமர்ந்திருக்கிறாள் . இது எதனால் 

என்ற கேள்வி நமக்குதோன்றும் , ஏனென்றால் நம் புராண 

கதைகளிலே படித்துள்ளோம்  "நமதுசௌடேஸ்வரி 

நந்தவைதீகர்களுக்கு குல தெய்வம் ஆன கதை" அப்படிநாமும் 

நந்தவைதீகர்களும் ஒரே கோவிலில் சௌடேஸ்வரியை 7 

நிலைராஜகோபுரம் கட்டி கொலுஅமர்தி இருந்தோம் ஆனால் 

சில நாட்கள் கடந்தபின்னர் கோவில் நிர்வாகம் "நந்தவைதீகர்களுக்கு" 

சென்றது அவர்கள்நம்மவர்கள் கோவிலுக்குள் வர தடை செய்தார்கள் 

பின் நம்மவர்கள்கோவிலில் மறுபுர மதில் சுவரில் வழி அமைத்து அதில் 

வந்து நாம்அன்னையை வழிபட்டார்கள் .

இந்த சம்பவத்தை பார்த்த நாம் தாய் தன் குழந்தைகளுக்கு 

ஏற்பட்டஅவமானத்தை போக்க அவள் அந்த கருவறையை விட்டு 

நம் குல மக்கள்வரும் வழியில்  வந்து அமர்ந்தாள். 

 

 

 

நம் தேவாங்க மக்களுக்காக இடம் மாறி அமர்ந்து காட்சி 

கொடுக்கும்அம்மனை அவசியம் காண வேண்டும் என்பது 

சொல்லி தெரிய வேண்டுமா ?

 

ஐஸ்வண்தராயர் என்னும் பாளையக்காரர் தன் ராஜ்ஜியத்தை  

விரிவுபடுத்த எண்ணியபோது   நந்தவரம் சவுடேஸ்வரி அன்னையிடம்

தான் செல்லும் இடமெல்லாம் தன்னுடன் வந்து தன் படையய்

நடத்திச்செல்லவேண்டும் என்று வரம் பெறுகிறார். அப்படி தன்

ராஜ்ஜியத்தை  விரிவுபடுத்தி வரும் வழியில் கர்நாடக மாநிலம்

திப்தூர் மாவட்டத்திடல் உள்ள  தசர்கட்டா என்னும் ஊரில் குடிகொள்ள

விரும்பியதால் அங்கேயே  பாளையக்காரர் ஆலயம் அமைத்து

தேவியை குடிகொள்ள செய்கிறார். 

 

தசர்கட்டா கோவில் பற்றிய முழு விபரத்தையும் வேர் ஒரு கட்டுரையில் கானுக 

http://www.devangaworld.com/en/node/265

 

கோவில் திறந்திருக்கும் நேரம் : 

காலை: 5.30 மணி வரை 1.00

மாலை: 3:00 மணி 8:30 மணி வரை

 

அருகில் உள்ள ரயில் நிலையம் :

பன்யம்  [19 கி.மீ. தொலைவில் உள்ளது ]

 

பெங்களூரிலிருந்து பன்யாவிற்கு செல்லும்  ரயில் விபரம் : 

ரயில் எண்  |  ரயில் பெயர்      | புறப்படும் நேரம்  | சேரும் நேரம்

56503                  VIJAYAWADA PASS            07:40                                 20:18

 

ரயில் கட்டணம் விபரம் : 

ரயில் கட்டணம் 170 ரூபாய்

 

பெங்களூரிலிருந்து    நந்தியாலுற்கு செல்லும்  ரயில்கள் விபரம் : 

 

ரயில் எண்  |  ரயில் பெயர்      | புறப்படும் நேரம்  | சேரும் நேரம்

56503                  VIJAYAWADA PASS                07:40                              21:05    
18464                     PRASANTHI EXP                 14:00                              23:15    
17212                  KONDAVEEDU EXP               14:30                             22:40

 

ரயில் கட்டணம் விபரம் : 

ரயில் கட்டணம் 170 முதல் 270 ரூபாய் வரை

Image: 
Categories: 
Share Share
Scroll to Top