88929 25504
 
  • Total Visitors: 3747007
  • Unique Visitors: 308552
  • Registered Users: 35950

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

தேவாங்க மேன்பாட்டு கழகம்
 
தேவாங்க பெரியோர்களுக்கும் நண்பர்களுக்கும் தேவாங்க வேர்ல்ட் செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமியின் வணக்கங்கள். 

இன்று, 22-12-2020 செவ்வாய்க்கிழமை, "தேவாங்க வேர்ல்ட் அறக்கட்டளை" சார்பாக திரு. செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமி மற்றும் தேவங்க குல ரத்ன திரு எம்.எஸ்.நாகேந்திரா, பொருளாளர் திரு. மோகன் ராஜ், அறக்கட்டளை உறுப்பினர்களான திரு. சந்தோஷ்குமார் கிருஷ்ணஸ்வாமி, திரு. நாகராஜ் மற்றும் திரு. கிரி உள்ளிட்ட தேவாங்க வேர்ல்ட் அறக்கட்டளை உறுப்பினர்கள் மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் திரு. எடியூறப்பா அவர்களை அவரது அதிகாரபூர்வ அரசு அலுவலகத்தில் நேரடியாக சந்தித்து கர்நாடக வாழ் தேவாங்க மக்களுக்கென்று தனியாக அரசாங்க சார்பில் "தேவாங்க அபிவ்ரித்தி நிகம" (தேவாங்க மேன்பாட்டு கழகம்) அமைத்து கொடுக்க கோரியும் தேவங்க மக்களுக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கப்பெறுவதில் உள்ள சிரமங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது. இவை அனைத்தையும்  பொறுமையாகக் கேட்டு கொண்ட மாண்புமிகு கர்நாடக முதலமைச்சர் தேவங்க வேர்ல்ட் அறக்கட்டளையின்  மனுவை பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

நம் தேவாங்க குல மக்களுக்கு *"தேவாங்க மேன்பாட்டு கழகம்" என்றால் என்ன, இது அரசு துறையா அல்லது தனியார் துறையா? "தேவாங்க மேன்பாட்டு கழகம்" அமைவதால் என்ன பயன். இது அமைக்கப்பட்டால் நம் தேவாங்க மக்கள் அடையவிருக்கும் அரசாங்க உதவிகள் என்ன என்ற கேள்விகள் நிச்ச்யம் இருக்கும்.* 

இந்த அனைத்து கேள்விகளுக்கும் எனக்கு தெரிந்த நான் புரிந்து கொண்ட விஷயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

"தேவாங்க மேன்பாட்டு கழகம்" என்பது ஒரு அரசு துறையாக செயல்படும். இது முழுக்க முழுக்க தேவாங்க மக்களின் மேன்பாட்டிற்காக மட்டும் செயல் படும் ஒரு துறையாக இயங்கும். இதில் அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட நமது தேவாங்க குலத்தின் பிரதிநிதியும் இடம் பெறுவார்கள். "தேவாங்க மேன்பாட்டு கழகம்" குறிப்பாக தேவாங்க மக்களின் நிதி நிலைமையை மேம்படுத்துவதற்காக செயல்படும். அரசாங்கத்தால் தனியாக நிதி ஒதுக்கப்பட்டு திட்டங்கள் அறிவிக்கப்படும்.  

இப்படி ஒரு சமூகத்திற்காக மட்டும் மேன்பாட்டு கழகம் அமைக்க முடியுமா என்று நீங்கள் கேள்வி எழுப்புவது எனக்கு புரிகிறது. 

கர்நாடக மாநிலத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி / மொழி / சமூகம் / வர்க்கம் / குழுவினருக்கான மேன்பாட்டு கழகம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது. எனவே இது ஒரு புதிய கோரிக்கை அல்ல என்பதால் "தேவாங்க மேன்பாட்டு கழகம்" முற்றிலும் சாத்தியமான ஒன்று.  

"தேவாங்க மேன்பாட்டு கழகம்" அமைக்கப்பெறுவதால் நம் தேவாங்க மக்களுக்கு அரசாங்க உதவிகளில் முன்னுரிமை அளிக்கப்படும் அது மட்டுமல்லாமல், இன்னும் பிற நன்மைகளும் அரசாங்க உதவிகளும் கிடைப்பெரும். "தேவாங்க மேன்பாட்டு கழகத்தை" நிறுவுவதால் தேவாங்க மக்களின் குல தொழிலான கைத்தறி, விசைத் தறி, இன்னும் நெசவு சம்பந்தபட்ட அனைத்து உப தொழில்களுக்கும், துணி விற்பனை / மூலப்பொருட்கள் விற்பனை, தறி உதிரிபாகங்கள் விற்பனை போன்ற நமது தேவாங்க மக்களின் குல தொழிலுக்கு கடன் வசதிகள் அரசாங்கத்தால் வழங்கப்படும். அது மட்டுமல்லாமல் நமது தேவாங்க குல குழந்தைகளுக்கு வருமானவரி உச்சவரம்பு கணக்கீட்டிற்கேற்ப கல்விக்கான மானியங்கள் வழங்கப்படும்.

மேலும் தேவாங்க மக்கள் தமது குல தொழிலான நெசவு அல்லாது வேறு தொழிலை மேற்கொண்டு வருபவர்கள் ஆயினும் அந்த தொழில்களுக்கு கடன் உதவி, தொழில் பயிற்சி போன்ற அரசாங்கத்தின் உதவிகளையும் வசதி வாய்ப்புகளையும் பெறமுடியும். தேவாங்க பெண் தொழில் முனைவோர்க்கும் அரசாங்க கடனுதவி, தொழிற்பயிற்சி போன்ற உதவிகளும் கிடைக்கப்பெறும். 

அரசாங்க கடன் உதவிபெறுவதால் நமது தேவாங்க குல மக்கள் கடனுக்கான வட்டி செலுத்துதல், கடனை திருப்பி செலுத்துதல் போன்ற சுமைகளில் மாட்டிக்கொள்வார்கள் அல்லவா என்ற கேள்விகள் உங்களுக்குள் எழலாம்.  

"தேவாங்க மேன்பாட்டு கழகம்" மூலமும் அதன் விதிகளின் படியும் வங்கிகளால் கொடுக்கப்படும் கடனுக்கான வட்டிவிகிதம் மிக குறைவாக இருக்கும், கடனை எளிய முறையில் நீண்ட தவணையில் திருப்பி கொடுக்கும் வசதியும் கிடைக்கும். 

ஏற்கனவே செயல்பாட்டில் இருந்துவரும் டி.தேவராஜ் அரஸ் பின்தங்கிய வகுப்பினர்கான மேம்பாட்டுக் கழகதின் கீழ் "தேவாங்க மேன்பாட்டு கழகம்" அமைக்கப்படும் மேலும் மாவட்டம் / தாலுகா டி.தேவராஜ் அரஸ் பின்தங்கிய வகுப்பினரின் நலன்களுக்காக அலுவலகங்களில் நமது தேவாங்க மக்கள் விண்ணப்பம் அளித்து பதிவுசெய்து கொண்டு அனைத்து பயன்களையும் பெற முடியும். 

கர்நாடக மாநிலத்தில் இருக்கும் அனைத்து தேவாங்க குல அமைப்புகளும் கர்நாடக அரசாங்கம் "தேவாங்க மேன்பாட்டு கழகம்" அமைத்து தர கோரி போராட்டங்களை அறிவித்தும் ஆங்காங்கே வெற்றிகரமாக போராட்டங்களை நடத்தியும் அரசாங்க அரிகரிக்களுக்கும், அமைச்சர்களுக்கும் மனு அளித்தும் வருவது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தேவாங்க வேர்ல்ட் அறக்கட்டளை சார்பாக கர்நாடக முதலமைச்சர் மாண்புமிகு எடியூறப்பா அவர்களை நேரில் சந்தித்து மனு அளிப்பது என்று முடிவெடுக்கப்பட்டு அதன் படி இன்று மாண்புமிகு கர்நாடக முதலமைச்சரிடமும், பொம்மனஹள்ளி சட்டமன்ற உறுப்பினர் திரு சதீஷ் ரெட்டி அவர்களிடமும் மனு நேரில் வழங்கப்பட்டது. "தேவாங்க மேன்பாட்டு கழகம்" அமைக்கும் இந்த முயற்சியில் மொழி மாநிலம் தொழில் கடந்து நாம் அனைவரும் தேவாங்க என்ற அடிப்படையில் ஒன்றிணைவோம். கர்நாடக மாநிலத்தில் போராடிவரும் நமது உறவுகளுக்கு ஆதரவளிப்போம். இன்றய நமது தேவாங்க குலத்தையும், நமது பிள்ளைகளின் வாழ்வையும் நமது எதிர்கால சந்ததிகளின் வாழ்வையும் மேம்படுத்த முயற்சி மேற்கொள்வோம். 

கர்நாடக மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சி போன்ற நமது தமிழகத்திலும் முயற்சியை முன்னெடுப்போம். தமிழகத்தில் இன்னும் சிலமாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ள இந்த நிலையில் நமது கோரிக்கையை வலுவாக அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கொண்டு சேர்ப்பதன் மூலம் நமது குரலுக்கு வலு சேர்க்க முடியும். நமது கோரிக்கைகள் அனைத்தையும் உறுதிப்படிக்கொள்ள முடியும்.  

முயற்சி செய்வோம் வெற்றி பெறுவோம் 
 
உங்கள்: 
தேவாங்க வேர்ல்ட்
திரு. செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமி

Image: 
Categories: 
Share Share
Scroll to Top