88929 25504
 
  • Total Visitors: 3745752
  • Unique Visitors: 308265
  • Registered Users: 35949

Error message

  • Notice: Trying to access array offset on value of type int in element_children() (line 6569 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

  • Deprecated function: implode(): Passing glue string after array is deprecated. Swap the parameters in drupal_get_feeds() (line 394 of /home4/devan1ay/public_html/includes/common.inc).

*யக்ஞோபவீதம், ஜனிவாரா (பூணுல்)*

*தேவாங்க மக்களின் முக்கிய பண்டிகை*

பூணுல் ஏன் தேவாங்க மக்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று என்ற கேள்விக்கு மிகவும் எளிதாக புரிந்துகொள்ளும் வைகையில் சொல்லவேண்டும் என்றல் பூணுல் இந்த உலக மக்களுக்கு மட்டும் அல்லாது தேவர்களுக்கும் தேவாங்கரான நம்மால் வழங்க பட்ட ஒன்று. மிகவும் அர்த்தமுள்ள, மிகவும் பவித்திரமான இந்த பூணுலை நாம் அணிவதும் கொண்டாடுவதும் நம் தேவாங்க மக்களின் முழு முதல் கடமை.

தேவாங்க ரிஷியானா ஸ்ரீ தேவல மகரிஷியானவர் காயத்ரி, சரஸ்வதி மற்றும் சாவித்ரி என்ற மூன்று பெரும் தெய்வ சக்திகளை மூன்று இழைகளாகவும். சிவன், விஷ்ணு, பிரம்மன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்ஸமாக மூன்று முடிச்சுகளையும் , ஒவ்வொரு முடிச்சிலும் மூன்று பிரிகளாகவும், மூன்று முடிச்சுகளிலும் உள்ள ஒன்பது பிரிகளை நவகிரகங்களாகவும் கொண்டு பூணுலை உருவாக்கி அதில் மனிதர்களையும், தெய்வங்களையும் நல்வழிப்படுத்தும் மகத்தான பெரும் உண்மையை உள்ளடக்கி கொடுத்தார்.

இப்பெரும் பவித்திரமான பூணுலை நமது உடலில் அணிந்துக்கொள்ளவதன்மூலம் மூன்று பெரும் தெய்வ சக்திகளும், மும்மூர்த்திகளும், நவகிரகங்களும் நம்மை எல்லா நேரங்களிலும் நம்முடனிருந்து நம்மை காப்பதாக ஐதீகம். இதுவே பூணூல் அணிந்துகொள்வதன் முக்கியத்துவம்.

முன்காலத்தில் அந்தணர்கள் மட்டுமின்றி, வணிகர்கள், மன்னர்கள், சூத்திரர்கள் முதலான அனைத்து பிரிவு மக்களும் பெண்களும் உட்பட பூணுல் தரித்து வந்தனர். பூணுல் அணிந்தால் கடைபிடிக்க வேண்டிய நியமங்களின் காரணமாக முதலில் பெண்கள் இதிலிருந்து விடுவிக்கப்பட்டனர். இதே காரணத்திற்காகவும் தங்கள் வாழ்கை முறை வசதிக்காகவும் சில பிரிவு மக்களும் இதிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்டனர்.

தேவாங்க குல மக்கள் தவிர அனைத்து பிரிவு மக்களுக்கும் சிறுவயதில் உபநயனம் செய்து வைக்கப்படும் இதன் காரணம். ஒரு சிறுவன் அல்லது சிறுமி 11 அல்லது 12 வயது அடைந்தவுடன், தனக்குள் தெய்வீகத்தை உணர்வதற்காக பூணுல் அனுவித்து பிரம்மப் பிரதிஷ்டை தீட்சை வழங்கப்படும். வெகு காலமாகவே பெண்களின் வாழ்க்கைமுறை சிரமத்தை கருத்தில் கொண்டு சிறுமிகளுக்கு உபநயனம் செய்வதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. ஒருவர் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைக்கும் முன், நானே ப்ரம்மா என்ற புரிதலிலுடனும் அனுபவத்துடனும் வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே உபநயனம் செய்விக்கப்பட்டது. இந்த மகத்தான உண்மையே நம் ஸ்ரீ தேவல மகரிஷி பூணுலில் அடக்கி கொடுத்த ஒன்று.

ஒருவன் தானே ப்ரம்மா என்ற புரிதலுக்கு வந்துவிட்டால் ஆண் பெண் என்ற பேதம் அகன்று போகும். பொய், களவு, துவேசம், கோபம், புரட்டு போன்ற துர்குணங்கள் அகன்று போகும். இப்படிப்பட்ட ஒரு அதி சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் பூணுலை ஸ்ரீ தேவல மகரிஷி இந்த உலகிற்கு உருவாக்கி கொடுத்தார். இதே காரணத்திற்காக உபநயனம், பூணுல் பண்டிகை தொடங்கப்பட்டு கொண்டாடப்படுகிறது.

தேவாங்க மக்கள் மட்டும் தங்களின் குழந்தைகளுக்கு உபநயனம் செய்யாததின் காரணம். தேவாங்க மக்கள் சிவனால் சிவனிலிருந்து சிவனாகவே உருவானவர்கள். தேவாங்க மக்கள் தானே ப்ரம்மா என்பதை மிகவும் எளிதாக உணர்ந்து கொள்ளும் ஆற்றல் படைத்தவர்கள். அதனால் அக்காலத்தில் உபநயனம் என்ற ஒன்று தேவாங்க மக்களுக்கு தேவைப்படவில்லை. மேலும் தேவாங்க குழந்தை பிறகும் போதே கர்ணன் கவச குண்டலங்களுடன் பிறந்ததை போல தானே ப்ரம்மா என்ற கண்ணுக்கு புலப்படாத ஆன்ம ஞான பூணுலுடன்தான் பிறப்பதாக ஐதீகம். தற்பொழுதுள்ள சூழ்நிலையிலும் வாழ்க்கைமுறையிலும் இப் பெரும் ஞானத்தை தேவாங்க மக்களான நாம் உணர்ந்து கொள்வதில் சிறு சிரமம் உள்ளது. நாம் இதற்கான சிறு முயற்சி செய்தால் கூட போதும் மிகவும் எளிதில் இந்த பெரும் உண்மையை அறிந்துகொள்ள முடியும்.

இந்த பூணுல் பண்டிகையில் ஸ்ரீ தேவல மகரிஷி அருளிய இந்த பெரும் உண்மையை புரிந்துகொள்வும் அறிந்துகொள்வும் முயற்சி செய்வோம்.

பூணுல் வெரும் மேல்தட்டு மக்களுக்கு மட்டுமானது என்று தவறாக புரிந்து கொண்டவர்களுக்கும், பூணுலையும் அதன் மகத்துவம் அறியாது அதை கேவல படுத்த முயற்சிக்கும் சிலருக்கு ஆன்ம ஞானம் பெற விரும்பும் யாரொருவரும் இதை அணியலாம் என்பதையும். இந்த ஆன்ம ஞானத்தினால் மட்டும் குற்றமற்ற அதி சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதை எடுத்துரைக்கும் கடமையும் நமக்குள்ளது என்பதை புரிந்துகொள்வோம்.

கட்டுரை :

தேவாங்க வேர்ல்ட்

செந்தில் குமார் கிருஷ்ணஸ்வாமி, MCA, PGDBA, ccna, ccnp, itil, iso iec /20000

Image: 
Categories: 
Share Share
Scroll to Top